7 நாட்களே ஆன பெண் சிசு செயற்கை முறையில் மூச்சு திணறடிக்கப்பட்டதா? உசிலம்பட்டியில் பரபரப்பு

 

பிறந்து 7 நாட்களேயான பெண் சிசு ஒன்று செயற்கை முறையில் மூச்சு திணற வைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

மதுரை அருகே உசிலம்பட்டியில் பிறந்து 7 நாட்களேயான பெண் சிசு சமீபத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. பெண் சிசுக்கள் உசிலம்பட்டி பகுதியில் அதிகம் உயிரிழந்து வருவதை அடுத்து இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது

இந்த விசாரணையில் முதல்கட்டமாக மரணம் அடைந்த பெண் சிசுவுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் மூச்சுத் திணறல் காரணமாக பெண் சிசு உயிரிழந்ததாகவும் செயற்கை முறையில் மூச்சுத்திணற வைக்கப்பட்டதாகவும் தெரியவந்தது 
இதனை அடுத்து அந்த பெண் சிசுவின் பெற்றோர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். விசாரணையின் முடிவில் தான் பெண் சிசுவை இயற்கையாக மரணம் அடைந்ததா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது

உசிலம்பட்டி பகுதியில் பெண்சிசு கொலை செய்யப்படுவது கடந்த சில வருடங்களாக இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த கொடூரம் நடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web