முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார் விவேக் மனைவி!

 
முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார் விவேக் மனைவி!

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் நேற்று காலமான நிலையில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று மாலை மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விவேக்கின் மனைவி அருள்செல்வி அவர்கள் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்து தனது நன்றியை அனைவருக்கும் தெரிந்து கொண்டார். தனது கணவர் விவேக் அவர்களின் மறைவான இந்த நேரத்தில் தனது குடும்பத்திற்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று கூறினார்

vivek wife

மேலும் தனது கணவரின் உடல் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய உத்தரவிட்ட தமிழக அரசுக்கு தனது நன்றி என்றும் தெரிவித்தார். காவல்துறையினர் மற்றும் ஊடகத் துறையினருக்கு தனது நன்றி என்றும் நேற்றைய தனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அவரது ரசிகர்களுக்கும் தனது நன்றி என்றும் தெரிவித்தார் 

இந்த பேட்டியின் போது விவேக்கின் உதவியாளர் செல் முருகன் மற்றும் விவேக்கின் மகள் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web