விவேக் மரணத்தையும் தடுப்பூசியையும் சம்மந்தப்படுத்த வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

 
விவேக் மரணத்தையும் தடுப்பூசியையும் சம்மந்தப்படுத்த வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

விவேக் மரணத்தையும் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதையும் சம்பந்தப்படுத்த வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்

பிரபல காமெடி நடிகர் விவேக் நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதுமட்டுமன்றி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார் 

vivek

இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பதும் அதற்கு மறுநாள் அவர் மரணமடைந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தடுப்பூசி அவர் போட்டுக் கொண்டதால் தான் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வந்தது 

இதனை அடுத்து நடிகர் விவேக்கின் மரணத்தையும் அவர் தடுப்பூசி போட்டு கொண்டதையும் இணைக்க வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். அரசின் மீது மருத்துவர்கள் மீதும் நம்பிக்கை வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

From around the web