விஜயகாந்த் உடல்நிலை: மனைவி, மகனுடன் அமெரிக்கா சென்றார்!

 
vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பரிசோதனை செய்து கொள்வதற்காக மனைவி மற்றும் மகனுடன் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று உள்ளார் என்பதும் சென்னையிலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு விஜயகாந்த் செல்வதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அந்த விமானத்தில் அவர் செல்லவில்லை என்றும் இன்று காலை பத்து முப்பது மணிக்கு கிளம்பிய விமானத்தில் அவர் துபாய் வழியாக அமெரிக்கா சென்று இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் இளைய மகன் சண்முக பாண்டியன் ஆகியோர்களும் அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் விஜயகாந்துக்கு சில நாட்கள் உடல்நிலை பரிசோதனை செய்யப்படும் என்றும் ஒரு சில சிகிச்சைக்கு பின் அவர் சில வாரங்கள் கழித்து சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜயகாந்த் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web