நர்ஸ்களுடன் விஜயகாந்த்: வைரல் புகைப்படம்

 
vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதற்காக துபாய் சென்றார் என்பது தெரிந்ததே. துபாயில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் நலமுடன் இருப்பதாகவும் அவருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் நலமுடன் இருப்பதாகவும் அங்கே இருந்த நர்ஸ் சகோதரிகளுடன் தான் நடித்த சத்ரியன் என்ற திரைப்படத்தை பார்த்ததாகவும் கூறியுள்ளார்

மேலும் இது குறித்த புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் தற்போது முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவருக்கு உடல் ரீதியில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும் அவரது வட்டாரங்கள் கூறுகின்றன 

இந்த நிலையில் விரைவில் அவர் துபாயில் இருந்து சென்னை திரும்புவார் என்றும் உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரத்தில் அவர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது


 

From around the web