தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் விஜயகாந்த்! தொண்டர்கள் உற்சாகம்

 
தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் விஜயகாந்த்! தொண்டர்கள் உற்சாகம்

வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் விஜயகாந்தின் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் கிடைத்துள்ளது என்பது தெரிந்ததே. இருப்பினும் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாகவும் எல்கே சதீஷ் கொரோனா பாதிப்பு காரணமாகவும் பிரச்சாரம் செய்யவில்லை. தற்போதைய நிலையில் பிரேமலதா மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் 

இந்த நிலையில் விரைவில் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தேமுதிக தலைமை அறிவித்துள்ளது. மொத்தம் ஐந்து நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் அவருடைய தேர்தல் பிரசார திட்டம் குறித்த பயண அட்டவணை விவரம் நாளை வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

vijayakanth

திருத்தணி திருவள்ளூர் விருகம்பாக்கம் பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில நிமிடங்கள் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் அவர் ஒரு சில நாட்கள் பிரச்சாரம் செய்தார் என்று குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது கட்சியின் தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது

From around the web