கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பாக முதல்வருக்கு நன்றி தெரிவித்த விஜய் வசந்த் எம்பி!

 
vijay vasanth

கன்னியாகுமாரி மாவட்டத்தின் சார்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கன்னியாகுமாரி தொகுதி மக்களவை எம்பி விஜய் வசந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

கொரோனா தற்காப்பு மற்றும் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், முகக் கவசம், கையுறை, சானிடைசர் விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை. தமிழக முதல்வருக்கும் அரசுக்கும் குமரி மாவட்ட மக்கள் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நாகர்கோவில் கிறிஸ்து நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்டதாகவும், பொதுமக்களிடம் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்ததாகவும், மேலும் கடை ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு தரமான முறையில் பொருட்கள் வழங்க வேண்டுமென கேட்டு கொண்டதாகவும் விஜய் வசந்த் எம்பி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை பணி, மக்களுக்கு முறையான குடிநீர் வழங்குதல், பழுதாகி குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை செப்பனிடுதல் போன்ற தேவைகளை நிறைவு செய்யுமாறு மாநகராட்சி ஆணையர் திருமதி ஆஷா அஜித் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்ததாகவும் விஜய் வசந்த் எம்பி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

From around the web