மதமாற்ற செய்திக்கு பதிலடி கொடுத்த விஜய்சேதுபதி

விஜய், விஜய்சேதுபதி உள்பட பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி கிறிஸ்துவ மதத்தைப் பரப்பும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக முன்னணி ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்திக்கு விஜய் சேதுபதி அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார். போய் வேற வேலை இருந்தா பாருங்கடா” என்று அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் விஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்கு காரணமே மதமாற்ற விவகாரம் தான் என்றும், பிகில் படத்தில் கிடைத்த கருப்புப்பணத்தில் திரையுலகில் உள்ளவர்களை
 
மதமாற்ற செய்திக்கு பதிலடி கொடுத்த விஜய்சேதுபதி

விஜய், விஜய்சேதுபதி உள்பட பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி கிறிஸ்துவ மதத்தைப் பரப்பும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக முன்னணி ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்திக்கு விஜய் சேதுபதி அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார். போய் வேற வேலை இருந்தா பாருங்கடா” என்று அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் விஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்கு காரணமே மதமாற்ற விவகாரம் தான் என்றும், பிகில் படத்தில் கிடைத்த கருப்புப்பணத்தில் திரையுலகில் உள்ளவர்களை மதமாற்றம் செய்யும் முயற்சி நடைபெற்றதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை கடந்த ஒரு வருடமாக உன்னிப்பாக கவனித்து வந்த மத்திய அரசு தகுந்த ஆவணங்களின் அடிப்படையில் தான் ரெய்டு செய்திருப்பதாகவும், விரைவில் விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த செய்திக்கு ஒரே ஒரு வரியில் விஜய்சேதுபதி பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web