நல்லா இருந்த என்னை இப்படி கொன்னுட்டாங்களே ஐயா? விஜிபி சிலை மனிதன் புலம்பல்

 

சென்னையில் உள்ள புகழ்பெற்ற கடற்கரைகளில் ஒன்று விஜிபி என்பதும் இந்த பீச்சில் வாயிலருகே சிலை மனிதன் ஒருவர் இருந்து சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வருவார் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜிபி சிலை மனிதன் தாஸ் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துவிட்டதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. 

இந்த நிலையில் விஜிபி கடற்கரையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தோன்றிய சிலை மனிதன் தாஸ் ’தான் உடல் நலத்துடன் நன்றாக இருப்பதாகவும் தன்னை பற்றிய செய்திகள் அனைத்தும் முழுக்க முழுக்க வதந்தி என்றும் எனவே அந்த செய்திகளை நம்பாதீர்கள் என்றும் கூறியுள்ளார் 

மேலும் விரைவில் விஜிபி கோல்டன் பீச் விரைவில் திறக்கப்படும் என்றும் அப்போது நீங்கள் என்னை வழக்கம்போல் சந்திக்கலாம் என்றும் அவர் அந்த வீடியோ தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் அவர் குறித்த மரண செய்தி வதந்தி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது  

From around the web