ரூ.55 கோடியில் கட்டப்பட்ட வண்டலூர் மேம்பாலம் திறப்பு: போக்குவரத்து நெரிசல் குறையுமா?

 

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பூங்கா அருகே ரூ.55 கோடியில் அமைக்கப்பட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் பழனிசாமி சற்றுமுன் திறந்துவைத்தார் 

வண்டலூர் பூங்கா அருகே 711 மீட்டர் நீளம் மற்றும் 23 மீ அகலம் கொண்ட 6 வழி சாலை மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளாக கட்டப்பட்டு தற்போது இந்த பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த பாலத்தை சற்றுமுன் திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘வண்டலூர் மேம்பாலம் மூலம் கேளம்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று கூறினார்.

மேலும் கோயம்பேடு மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வரும் டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும், முதல்வர் பழனிசாமி கூறினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பாலம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி தற்போது 4 வருடங்கள் கழித்து முடிவுக்கு வந்துள்ளது. இந்த இந்த பாலத்தை முதல்வர் பழனிசாமி நேரில் வந்து திறந்து வைத்ததை அடுத்து அந்த பகுதி மக்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

From around the web