தடுப்பூசி, சிகிச்சை இல்லை: நிபா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்

 
niba virus

கேரளாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டுமின்றி நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நிபா வைரஸ் காரணமாக 12 வயது சிறுவன் பலியாகி உள்ள நிலையில் மேலும் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 

இந்த நிலையில் கேரள மாநில எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களிலும் நிபா வைரஸ் பாதிப்பு பரவாத வகையில் தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் நிபா வைரஸ் வவ்வால்கள் மற்றும் பன்றிகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் என்றும் சுகாதாரமில்லாத உணவுகளால் இந்த வைரஸ் பரவும் என்றும் இந்த வைரஸ் பாதிப்பு தடுப்பூசியும் சிகிச்சை முறைகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர் 

மேலும் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, தொண்டை புண் ஆகியவை இதற்கான அறிகுறிகள் என்றும், இந்த நோய் அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்த எந்த பயமும் இல்லை என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

From around the web