தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் மது அருந்தக் கூடாது: அமைச்சர் விஜயபாஸ்கர்

 

கொரோனா தடுப்பு ஊசி போடுபவர்கள் முதல் டோஸ் போட்டுவிட்டு இரண்டாவது டோஸ் போடும் வரை மது அருந்தக்கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது அனைத்து மக்களுக்கும் கொரனோ தடுப்பூசி போட மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளது

இதனை அடுத்து சீரம் இன்ஸ்டீட் நிறுவனத்திடமிருந்து ரூபாய் 200 விலையில் மத்திய அரசு கொரோனா தடுப்பூசியை வாங்கி உள்ளது என்பதும் இந்த மருந்துகள் வரும் 19ஆம் தேதி சென்னைக்கு வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

tasmac

இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக் கொள்பவர்கள் இரண்டாவது டோஸ் போடும் வரையில் அதாவது 28 நாட்களுக்கு மருந்து அருந்த கூடாது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார் 

முதல் மற்றும் இரண்டாவது டோஸ் போடும் கால இடைவெளிக்குள் மது அருந்தினால் கொரோனா தடுப்பூசி வேலை செய்யாது என்ற வகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மது கடையை திறந்து வைத்துவிட்டு மது அருந்தக் கூடாது என்று கூறினால் எப்படி? என்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைவருக்கும் போட்டு முடிக்கும் வரை மதுக்கடையை மூட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்

From around the web