தமிழகத்தில் தடுப்பூசி நிறுத்தம்: பொதுமக்கள் அதிர்ச்சி

 
vaccine

தமிழகத்தில் சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் இன்று தடுப்பூசிகள் நிறுத்தப்படும் சூழல் இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னையில் இன்று மதியம் வரை மட்டுமே தடுப்பூசி போடுவதற்காக ஸ்டாக் உள்ளது என்றும் அதன் பின்னர் தடுப்பூசி நிறுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 

அதேபோல் திருச்சி கோவை நாமக்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் தடுப்பூசிகள் இருப்பு இல்லை என்பதால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான தடுப்பு ஊசிகளை உடனடியாக அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்திலிருந்து விடுக்கப்பட்டு உள்ளது

இதனை அடுத்து இன்று மாலை இரண்டு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வர இருப்பதாகவும் அதன் பின்னர் அந்த தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பிய பின்னர் நாளை முதல் மீண்டும் தடுப்பு ஊசிகள் போடப்படும் என்றும் கூறப்படுகிறது

மேலும் தமிழகத்திற்கு அனுப்பப்படும் தடுப்பூசிகளின் 90% அரசு மருத்துவமனைகளுக்காக இருக்க வேண்டுமென்றும் 10% மட்டுமே தனியார் மருத்துவமனைகளுக்கு இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

From around the web