மெரீனாவில் கட்டுக்கடங்காத கூட்டம்: மூடப்படுமா?

 
மெரீனாவில் கட்டுக்கடங்காத கூட்டம்: மூடப்படுமா?

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தாலும் இன்னொருபக்கம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்

தினமும் ஆயிரம் பேர் அதிகமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும் மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் 50%க்கும் மேல் மாஸ்க் அணியாமல் கவனக் குறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

marina

இந்த நிலையில் இன்று விடுமுறை நாளை அடுத்து சென்னை மெரினாவில் கூட்டம் குவிந்துள்ளது. சென்னை மெரினாவில் கூடியுள்ள பொதுமக்களில் பலர் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல், மாஸ்க் அணியாமல் இருப்பதால் கொரோனா நோய் தொற்று மேலும் மிக வேகமாக பரவும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது

தமிழகத்தில் இரண்டாம் அலை உறுதி செய்யப்பட்டதை அடுத்து பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரத்தில் மெரினாவில் இவ்வாறு கூடியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து சென்னை மெரினாவை மூடுவது குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web