11 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நாளை ஆலோசனை!

தமிழ்நாடு, சட்டீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் அமைச்சர்களுடன் நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை செய்ய உள்ளார்!
 

மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோய் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவு வருவது கொரோனா நோய் தான். இந்த கொரோனா முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. அதிலிருந்து உலகில் உள்ள பல நாடுகளுக்கும் பரவியது. குறிப்பாக மேற்கத்திய பிரேசில், இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேலும் இந்த கொரோனா நோயானது கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவிலும் பரவத் தொடங்கியது. ஆனால் இந்திய அரசானது கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே  முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தியது.

corona

அதன்பின்னர் தற்போது கொரோனா மிகவும் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பல பகுதிகளில் கொரோனா காணப்படுகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர்  ஹர்ஷ்வர்தன். அவர் 11 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார்.

கொரோனா அதிகரித்துவரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசகளுடன் நாளை அவர் ஆலோசனை மேற்கொள் இருக்கிறார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா ,சத்தீஸ்கர் உள்ளிட்ட 11 மாநிலங்களில் மாநில சுகாதார துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web