உடுமலை சங்கர் வழக்கில் இன்று தீர்ப்பு: கவுசல்யா தந்தைக்கு மரண தண்டனை உறுதி செய்யப்படுமா?

2015-ஆம் ஆண்டு உடுமலையை சேர்ந்த சங்கரும், பழநியைச் சேர்ந்த கவுசல்யாவும் காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்த நிலையில் இந்த திருமணத்திற்கு கவுசல்யாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் பட்டப்பகலில் சங்கர் மற்றும் கவுசல்யா மர்ம நபர்களால் வெட்டப்பட்டனர். இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவுசல்யா படுகாயங்களுடன் உயிர் தப்பித்தார். இந்த நிலையில் இதுகுறித்த வழக்கில் கவுசல்யாவின் குடும்பத்தினர் தான் ஆட்களை ஏவி படுகொலை செய்ததாக
 
உடுமலை சங்கர் வழக்கில் இன்று தீர்ப்பு: கவுசல்யா தந்தைக்கு மரண தண்டனை உறுதி செய்யப்படுமா?

2015-ஆம் ஆண்டு உடுமலையை சேர்ந்த சங்கரும், பழநியைச் சேர்ந்த கவுசல்யாவும் காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்த நிலையில் இந்த திருமணத்திற்கு கவுசல்யாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் பட்டப்பகலில் சங்கர் மற்றும் கவுசல்யா மர்ம நபர்களால் வெட்டப்பட்டனர். இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவுசல்யா படுகாயங்களுடன் உயிர் தப்பித்தார்.

இந்த நிலையில் இதுகுறித்த வழக்கில் கவுசல்யாவின் குடும்பத்தினர் தான் ஆட்களை ஏவி படுகொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் கவுசல்யாவின் தாய், தந்தை, தாய்மாமன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு, செய்யப்பட்டு திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, உறவினர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மரண தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். அதேபோல் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. இன்று கவுசல்யாவின் தந்தைக்கு மரண தண்டனை உறுதி செய்யப்படுமா? என்பது தீர்ப்பில் தெரிய வரும்

From around the web