திருமண தம்பதிகளை இப்படியா வாழ்த்துவது: உதயநிதிக்கு குவியும் கண்டனங்கள்

திருமணத்தை நடத்த வரும் அரசியல்வாதிகள் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்காமல் அரசியல் பேசி வருவது தமிழகத்தில் காலங்காலமாக நடந்து வரும்போது வழக்கமாக இருந்து வருகிறது. அப்படியே தம்பதிகளை வாழ்த்தினாலும் அரசியல் கலந்து வாழ்த்து தெரிவிப்பதும், அந்த வாழ்த்துக்கள் சில சமயங்களில் அபசகுணமாகஅமைந்துவிடுவதும் உண்டு இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது அவர் மணமக்களை வாழ்த்தி பேசிய போது ’மத்திய மாநில
 
திருமண தம்பதிகளை இப்படியா வாழ்த்துவது: உதயநிதிக்கு குவியும் கண்டனங்கள்

திருமணத்தை நடத்த வரும் அரசியல்வாதிகள் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்காமல் அரசியல் பேசி வருவது தமிழகத்தில் காலங்காலமாக நடந்து வரும்போது வழக்கமாக இருந்து வருகிறது. அப்படியே தம்பதிகளை வாழ்த்தினாலும் அரசியல் கலந்து வாழ்த்து தெரிவிப்பதும், அந்த வாழ்த்துக்கள் சில சமயங்களில் அபசகுணமாகஅமைந்துவிடுவதும் உண்டு

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது அவர் மணமக்களை வாழ்த்தி பேசிய போது ’மத்திய மாநில அரசுகள் போல் ஒருத்தருக்கு ஒருத்தர் அடிமையாக இருக்க வேண்டாம் என்றும், உரிமைகளை விட்டுத் தராமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து மணமக்களை வாழ்த்தினார்

இந்த வாழ்த்து அரசியல் நகைச்சுவையாக கருதப்பட்டாலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துதான் தம்பதிகள் வாழ வேண்டும் என்று கூறாமல் உரிமைகளை விட்டுக்கொடுக்க கூடாது என்று தம்பதிகளை வாழ்த்துவதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கணவன் மனைவி என்றாலே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை என்பதும், ஒருவருக்கொருவர் அடிமையாக வாழ்வது அன்பின் அடிப்படையிதான் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கையில் உதயநிதி அதற்கு நேர் எதிராக வாழ்த்துகிறாரே என்று நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

From around the web