மூத்த தலைவர்களை சந்தித்து நன்றி கூறிய உதயநிதி ஸ்டாலின்!

 
மூத்த தலைவர்களை சந்தித்து நன்றி கூறிய உதயநிதி ஸ்டாலின்!

தமிழகத்தில் திமுக ஆட்சியில் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் திமுக தலைவரும் முதல்வராக பொறுப்பேற்க இருப்பவருமான முக ஸ்டாலின் அவர்களின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் மூத்த தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார் 

முதல் கட்டமாக அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார். விஜயகாந்த் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள உதயநிதி அவர்கள் மாற்று கட்சி தலைவர் என்பதையும் பொருட்படுத்தாமல் அவரிடம் ஆசி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இதனை அடுத்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் அவர்களை சந்தித்து நன்றி கூறினார். அதன் பின்னர் அவர் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை சந்தித்து தனது தொகுதிக்காக பிரச்சாரம் மேற்கொண்டதற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் 

மேலும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களையும் சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றார். இது குறித்த புகைப்படங்களை உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web