நிறைய சாதிக்க காத்திருக்கும் உதயநிதி இதை சொல்லியிருக்க கூடாது: பிரேமலதா

சமீபத்தில் திமுகவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது
இதுகுறித்து பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்து வரும் நிலையில் வளர்ந்து வரும் அரசியல்வாதியான உதயநிதி ஸ்டாலின் இன்னும் நிறைய சாதிக்க வேண்டி இருப்பதால் இந்த நேரத்தில் அவர் பெண்கள் குறித்து இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்க கூடாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: உதயநிதி ஸ்டாலின் பெண்கள் இதுபோன்ற அவதூறாக பேசுவதை தவிர்ப்பது நல்லது என்றும் நிறைய சாதிக்க வேண்டிய சூழ்நிலையில் அவப்பெயரை பெற்று விடக்கூடாது என்றும் தெரிவித்தார்
மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததாகவும் அதன் பின்னர் இரண்டு முறையும் அதிமுக ஆட்சி பொறுப்பில் இருப்பதாகவும் எனவே தேமுதிக இருக்கும் கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்
பிரேமலதாவை அடுத்து அவரது மகன் விஜய பிரபாகரன் கூறியபோது கூட்டணியில் நின்றாலும் கூட்டணி இல்லாமல் தனித்து நின்றாலும் தேமுதிக தனது இலக்கை அடையும் என்றும் விரைவில் கோட்டையில் தேமுதிக கொடி பறக்கும் என்றும் கேப்டன் முதல்வர் ஆவார் என்றும் கூறினார்