திமுகவின் இளவரசர் ஆகிவிட்டார் உதயநிதி: தாராபுரத்தில் பிரதமர் மோடி

 

மூத்த தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளவரசராக மாறிவிட்டார் என்று தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடியை தாராபுரத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிவருகிறார். இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் எல் முருகன் வேல் ஒன்றைப் பரிசளித்தார். இந்த வேலை பெற்றுவிட்டு வெற்றிவேல் வீரவேல் என்று கூறிவிட்டு தனதுபேச்சை பிரதமர் மோடி ஆரம்பித்தார். அவர் கூறியதாவது:

modi

திமுகவின் மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது அவர்களை ஓரங்கட்டிவிட்டு உதயநிதி ஸ்டாலின் இளவரசராக மாறிவிட்டார் என்றும் மக்களுக்காக சிந்திக்கும் கட்சி பாஜக-அதிமுக என்றால் வாரிசுகளுக்காக சிந்திக்கும் கட்சிதான் திமுக மற்றும் காங்கிரஸ் என்று கூறினார் 
மேலும் உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச கேஸ் சிலிண்டர்கள் மொத்தம் 33 லட்சம் பெண்கள் பெற்று உள்ளார்கள் என்றும் எங்களுடைய பல திட்டங்களால் இந்தியா வளர்ச்சி பெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளில் உள்ள தலைவர்கள் தங்களுடைய பேச்சாளர்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

From around the web