3 மடங்கு கட்டணம் உயர்வு: மின் பயனீட்டாளர்கள் அதிர்ச்சி

 
EB

தமிழகத்தில் ஒரு சில மின் பயனீட்டாளர்களுக்கு மூன்று மடங்கு மின் கட்டணம் வந்திருப்பதாக கூறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மின் பயனீட்டு கணக்கீடு எடுக்கப்படவில்லை. இதனை அடுத்து முந்தைய மாத கட்டணம் அல்லது மின் அளவு எடுத்து வாட்ஸ் அப்பில் மின் அதிகாரிக்கு அனுப்பி அதற்குரிய மின் கட்டணத்தை கட்டலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில மின்பயனீட்டாளர்களுக்கு மூன்று மடங்கு மின் கட்டணம் வந்திருப்பதாகவும், ரூபாய் 570 கட்டிக்கொண்டிருந்த மீன் பயனீட்டாளர் ஒருவருக்கு 2500 கட்டணமாகவும், ரூபாய் 170 மின் கட்டணம் பற்றிய ஒருவருக்கு 650 மின் கட்டணமாக வந்து இருப்பதாகவும் கூறப்பட்டது. 

இதுகுறித்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறியபோது மின் கட்டணம் அதிகமாக வந்திருந்தால் தங்களது முகவரி மின் கணக்கீடு பயனாளி ஆகியவற்றை அனுப்பினால் அது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகமாக மின்கட்டணம் பெற்றிருந்தால் திருப்பி தரப்படும் என்றும் கூறியிருந்தார்.

From around the web