போக்குவரத்து உதவி ஆய்வாளர் மகன் சாலை விபத்தில் பரிதாப பலி!

ஊருக்கெல்லாம் போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மகன் சற்றுமுன் சாலை விபத்தில் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து சங்கர் என்பவரது மகன் நிதிஷ்குமார் அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். நிதீஷ்குமார் நேற்று நள்ளிரவு பணி முடிந்து தனது சக அலுவலர்களுடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது மாதவரம் கனக சத்திரம் அருகே வரும் போது
 
போக்குவரத்து உதவி ஆய்வாளர் மகன் சாலை விபத்தில் பரிதாப பலி!

ஊருக்கெல்லாம் போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மகன் சற்றுமுன் சாலை விபத்தில் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து சங்கர் என்பவரது மகன் நிதிஷ்குமார் அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

நிதீஷ்குமார் நேற்று நள்ளிரவு பணி முடிந்து தனது சக அலுவலர்களுடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது மாதவரம் கனக சத்திரம் அருகே வரும் போது அங்கு வந்த டிப்பர் லாரி ஒன்று திடீரென நிதிஷ்குமார் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர்.

இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மூவரையும் மீட்டு சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் நிதிஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

போக்குவரத்து காவலர் ஒருவரின் மகனே விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

From around the web