சுற்றுலா தலங்கள் திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு!

 
tourism

தமிழகத்தில் கடந்த மே மாதத்தை விட மிக குறைவாகதான் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பதால் அதிகப்படியான தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது 

இந்த நிலையில் இன்றிலிருந்து புதிய தளர்வுகள் அமலுக்கு வந்ததை அடுத்து கிட்டத்தட்ட தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் இபாஸ் இல்லாமல் செல்லலாம் என தமிழக சுற்றுல்லாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளது 

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு இபாஸ் இல்லாமல் செல்லலாம் என்று கூறிய சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன் அவர்கள் சுற்றுலா தளங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் பயணிகளில் விவரங்கள் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் 50 சதவீத சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சுற்றுலா பயணிகள் தனிமனித இடைவெளியில் கடைபிடித்து மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் உதகையில் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்

From around the web