டார்ச் லைட் சின்னம்: மனுவை வாபஸ் பெறுகிறதா மக்கள் நீதி மய்யம்?

 

சமீபத்தில் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்தது என்பது தெரிந்ததே. அதில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுவையில் டார்ச்லைட் சின்னமும், தமிழகத்தில் வேறு ஒரு சின்னமும் ஒதுக்கியதால் அக்கட்சி பெரும் அதிருப்தி அடைந்தது 

தமிழகத்திலும் தங்கள் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. அதுமட்டுமின்றி இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் அக்கட்சியின் சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

kamal torch

இந்த நிலையில் தமிழகத்தில் எம்ஜிஆர் மக்கள் கட்சி என்ற கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அக்கட்சி இந்த சின்னம் தங்களுக்குத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அனுப்பி இருக்கிறது. இதனை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் டார்ச்லைட் சின்னம் குறித்த வழக்கை மக்கள் நீதி மய்யம் கட்சி வாபஸ் பெற உள்ளதாக கூறப்படுகிறது. அந்த மனுவில் மேலும் அதில் சில கருத்துக்களை சேர்த்து மீண்டும் புதிய மனு தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தற்போது டார்ச் லைட் சின்னத்திற்கு வேறு எந்த கட்சியும் உரிமைக்கு கோராததால் அந்த சின்னத்தை தங்களுடைய கட்சிக்கு ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வரும் தேர்தலில் எப்படியாவது டார்ச்லைட் சின்னத்தை பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சி உறுதியுடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web