டார்ச்லைட் சின்னம்: கமல் கட்சியின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

 

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.  இந்த கட்சி கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது என்பதும் இந்த கட்சியின் வேட்பாளர்களுக்கு டார்ச்லைட் சின்னம் வழங்கப்பட்டது என்பதும் தெரிந்தது

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட போதிலும் ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்தோ அல்லது கூட்டணியில் இணைந்தோ போட்டியிட உள்ளது 

torch

இதனை அடுத்து சமீபத்தில் இக்கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்தது. அதுமட்டுமின்றி வேறு ஒரு கட்சிக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது

இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையிலேயே டார்ச்லைட் சின்னத்தை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது டார்ச்லைட் சின்னம் தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் தாங்கள் தொடுத்த வழக்கை வாபஸ் பெறுவதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்தது. இதையடுத்து இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து முடித்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web