நாளை உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை காலை 7.30 மணி முதல் நடைபெற உள்ளதை அடுத்து பெரும்பாலான டிவி சேனல்கள் இந்த ஜல்லிக்கட்டை நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளன. நாளை நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், 700 காளைகள், 920 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளதாகவும், இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர்
 
நாளை உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை காலை 7.30 மணி முதல் நடைபெற உள்ளதை அடுத்து பெரும்பாலான டிவி சேனல்கள் இந்த ஜல்லிக்கட்டை நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளன.

நாளை நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், 700 காளைகள், 920 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளதாகவும், இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகளுக்கும், காளையர்களுக்கும் 2 கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது. நாளைய ஜல்லிக்கட்டை பார்க்க இன்றே வெளிமாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் இருந்து பொதுமக்கள் அலங்காநல்லூர் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் அழைத்துவரப்பட்ட வண்ணம் உள்ளன.
இதனால், அலங்காநல்லூர் இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டது.

From around the web