6 மணிக்கு ஆலோசனை: முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

 
stalin

இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருப்பதாகவும் இதில் முக்கிய ஆலோசனை இடம்பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

புதிய தொழிற்சாலைக்கு அனுமதி வழங்குவது குறித்தும், நலத் திட்டங்களை கொண்டு வருவது குறித்தும், கொரோனா மூன்றாவது அலை குறித்தும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்  தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது

மேலும் உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் மற்றும் அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. புதிதாக திமுக ஆட்சி அமைந்தவுடன் ஏற்கனவே ஒருமுறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் இப்போது நடைபெற உள்ளது இரண்டாவது அமைச்சரவை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு பல்வேறு அதிரடி அறிவிப்புகள் முதல்வரிடம் இருந்து வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web