இன்றே கடைசி நாள்: ரேசனில் ரூ.2000 வாங்கிவிட்டீர்களா?

 
ration

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றவுடன் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ரூபாய் 4000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே 2000 வழங்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது தவணையாக 2000 வழங்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இரண்டாவது தவணை ரூபாய் 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் இன்றுக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஜூன் 25ஆம் தேதிக்குள் ரேஷனில் அரிசி அட்டைதாரர்களுக்கு இரண்டாவது தவணை ரூபாய் 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்களையும் வழங்கி விட்டதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து இதுவரை வாங்காதவர்கள் இன்றுக்குள் வாங்கிவிட அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்

மேலும் வெளியூர் சென்றவர்கள் மற்றும் இதுவரை ரூ.2000 மற்றும் மளிகைப்பொருட்கள் வாங்க முடியாதவர்களுக்கு தனியாக நாட்கள் ஒதுக்கப்படும் என்றும் அந்த நாட்களில் அவர்கள் வாங்கி கொள்ளலாம் என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

From around the web