இன்று ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள்: மீண்டும் திறக்கப்படும் நினைவிடம்!

 

இன்று முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு விழாவாக கொண்டாடப்படும் இந்த விழாவை அதிமுகவினர் வெகு சிறப்புடன் கொண்டாடி வருகின்றனர். ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்

மேலும் அதிமுக தொண்டர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணி காரணமாக பூட்டப்பட்டிருந்த ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறக்கப்படும் என்றும், ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகமும் இன்று முதல் திறக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

memorial

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று மீண்டும் ஜெயலலிதா நினைவிடத்தை திறக்க இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடம் இன்று திறக்கப்பட்டால், இன்று சசிகலா வருவாரா? அல்லது அவரது திநகர் வீட்டிலேயே ஜெயலலிதா புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

From around the web