டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: இணையதளத்தில் பார்க்கலாம்!

 
tnpsc

தமிழக அரசு பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி என்ற அமைப்பின் மூலம் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும் என்பதும் அதற்கான முடிவுகள் வெளியாகி ஊழியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடந்த டிஎன்பிஎஸ்சி துறைத்தேர்வு முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என விண்ணப்பதாரர்கள் காத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற 14 துறைகளுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. டிஎன்பிஎஸ்சி அமைப்பின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது

மேலும் வாய்மொழித் தேர்வு முடிவுகள் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் தங்களது முடிவுகளை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web