ஊரடங்கில் தளர்வுகள்: அதிரடி முடிவெடுத்த தமிழக அரசு!

 
tn assembly

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 14ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீடிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை செய்தார். சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை செய்த நிலையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்ய மருத்துவ குழுவினர் பரிந்துரை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தது.

இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்த பகுதிகளில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மேலும் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நீடிக்கும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
இது குறித்து நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது. மொத்தத்தில் தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின்படி கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மார்க் உள்ளிட்ட பல்வேறு கடைகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

From around the web