உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கு: தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்த தீர்ப்பில் கௌசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த தீர்ப்பு குறித்து கவுசல்யா உள்பட அவரது தரப்பினர் கடும் அதிருப்தி தெரிவித்தனர் என்பதும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதாக கௌசல்யா தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதுஇந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி உடுமலைப்பேட்டை கொலை
 

உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கு: தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்த தீர்ப்பில் கௌசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தீர்ப்பு குறித்து கவுசல்யா உள்பட அவரது தரப்பினர் கடும் அதிருப்தி தெரிவித்தனர் என்பதும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதாக கௌசல்யா தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி உடுமலைப்பேட்டை கொலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட கௌசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது

ஏற்கனவே சங்கரின் சகோதரர் மேல்முறையீடு செய்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடுமலை சங்கர் வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web