வேளாண் பாதுகாப்பு சட்டம்: 5 ஆண்டுகள் சிறை என தகவல்

காவிரி ஆற்றுப்படுகை மண்டலத்திலுள்ள வேளாண் நிலங்கள் பாதுகாப்புக்கென சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட முன்வடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் அறிமுகம் செய்தார் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னர் இந்த சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட தொழில்களை தொடங்கினால் அதிகபட்சமாக 5 ஆண்டுகளும், குறைந்த பட்சமாக 6 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி ரூ.50 லட்சம் அபராத தொகை விதிக்கப்படும் என்றும் சட்ட முன்வடிவில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும்
 
வேளாண் பாதுகாப்பு சட்டம்: 5 ஆண்டுகள் சிறை என தகவல்

காவிரி ஆற்றுப்படுகை மண்டலத்திலுள்ள வேளாண் நிலங்கள் பாதுகாப்புக்கென சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட முன்வடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் அறிமுகம் செய்தார்

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னர் இந்த சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட தொழில்களை தொடங்கினால் அதிகபட்சமாக 5 ஆண்டுகளும், குறைந்த பட்சமாக 6 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி ரூ.50 லட்சம் அபராத தொகை விதிக்கப்படும் என்றும் சட்ட முன்வடிவில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் துறைமுகம் , குழாய் இணைப்பு, சாலை, தொலைதொடர்புகள், மின்சாரம், நீர் வினியோகம் போன்ற உள்கட்டமைப்பு பாதிக்கலாகாது என்றும், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்களை பாதித்தலாகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web