தமிழக பட்ஜெட்: ஒரே நாடு ஒரே ரேஷன் உள்பட முக்கிய அறிவிப்புகள்

இந்த ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தற்போது தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் உள்பட பல முக்கிய அறிவிப்புகளை அவர் அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம் . ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஏற்க தமிழக அரசு முடிவு. ஸ்மார்ட் குடும்ப அட்டை வைத்திருப்போர் மாநிலத்தின் எந்தவொரு நியாய விலை கடையிலும் தங்களுக்குரிய பொருட்களை வாங்கிக்கொள்ளும் திட்டம் விரைவில்
 
தமிழக பட்ஜெட்: ஒரே நாடு ஒரே ரேஷன் உள்பட முக்கிய அறிவிப்புகள்

இந்த ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தற்போது தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் உள்பட பல முக்கிய அறிவிப்புகளை அவர் அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

 • . ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஏற்க தமிழக அரசு முடிவு. ஸ்மார்ட் குடும்ப அட்டை வைத்திருப்போர் மாநிலத்தின் எந்தவொரு நியாய விலை கடையிலும் தங்களுக்குரிய பொருட்களை வாங்கிக்கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்
 • கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் பழுதுபார்த்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கான நிதியுதவி ரூ.5 கோடியாக அதிகரிப்பு
 • திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவப்படும்.
 • நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.15 கோடி
 • 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.966.46 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
 • தமிழ்நாட்டில் மாணவர் ஆசிரியர் விகிதம் கட்டாயக் கல்விச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட விகிதத்தைக் காட்டிலும் போதுமான அளவில் உள்ளது.
 • அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.520.13 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
 • கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ.10 கோடி மானியம். 75 ஆண்டை நிறைவு செய்வதால் தரம் உயர்த்த நடவடிக்கை.
 • சென்னையில் கூவம் மற்றும் அடையாறு நதிகளை சீரமைக்க ரூ.5439 கோடி ஒதுக்கீடு
 • காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிலம் எடுக்க பட்ஜெட்டில் ரூ.700 கோடி ஒதுக்கீடு
 • வேளாண்துறைக்கு ரூ. 11,894 கோடி ஒதுக்கீடு!
 • சிறு குறு தொழிலுக்கு ரூ.607 கோடி ஒதுக்கீடு!
 • பேரிடர் மேலாண்மைக்காக ரூ.1360.11 கோடி நிதி ஒதுக்கீடு.
 • பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு
 • உயர் கல்வித்துறைக்கு ரூ.1,949 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
 • அரசு ஊழியர்களின் ஊதிய செலவுகளுக்காக 2020-21 நிதியாண்டில் ரூ.64,208 கோடி ஒதுக்கீடு
 • பணிபுரியும் பெண்கள் தங்குவதற்கு 13 இடங்களில் விடுதி கட்டப்படும்

From around the web