பொங்கல் பரிசை வாங்காதவர்கள் என்ன செய்யலாம்: தமிழக அரசு அறிக்கை

தமிழக அரசின் பொங்கல் பரிசான ஆயிரம் ரூபாய் உள்பட பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் ஜனவரி 9 ஆம் தேதியில் இருந்து 12 ஆம் தேதிக்குள் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டது. ஒருவேளை 12ஆம் தேதிகுள் வாங்காதவர்கள் இன்றுக்குள் வாங்கிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் பல்வேறு பணி காரணமாக இன்றும் வாங்க முடியாதவர்களுக்கு தற்போது மேலும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் ஜனவரி 21 ஆம்
 
பொங்கல் பரிசை வாங்காதவர்கள் என்ன செய்யலாம்: தமிழக அரசு அறிக்கை

தமிழக அரசின் பொங்கல் பரிசான ஆயிரம் ரூபாய் உள்பட பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் ஜனவரி 9 ஆம் தேதியில் இருந்து 12 ஆம் தேதிக்குள் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டது. ஒருவேளை 12ஆம் தேதிகுள் வாங்காதவர்கள் இன்றுக்குள் வாங்கிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பல்வேறு பணி காரணமாக இன்றும் வாங்க முடியாதவர்களுக்கு தற்போது மேலும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் ஜனவரி 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web