தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

 

தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வரும் நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யும் என இனிப்பான செய்தியை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

தமிழகத்தில் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் கர்நாடக வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், மற்றும் நீலகிரி ஆகிய பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

rain

அதேபோல் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட காலநிலை நிலவும் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஏப்ரல் 7,8ஆம் தேதிக்கு பின்னர் வறண்ட நிலை மாறி 9, 10 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் வெப்பத்தின் அளவு குறையும் என்றும் எந்த பகுதியிலும் இனிமேல் அனல்காற்று வீசாது என்றும் கடலோர மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலையும் உள் மாவட்டங்களில் சற்று அதிகமான வெப்ப நிலையில் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

From around the web