கொரோனா பேரிடர் உதவிக்கு தமிழக அரசு அறிவித்த வாட்ஸ் அப் எண் இதுதான்!

 
whats app

பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பேரிடர் உதவி தேவையென்றால் இந்த வாட்ஸ்அப் எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு சற்று முன்னர் வாட்ஸ்அப் எண் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது 

9445869848 என்ற இந்த வாட்ஸ்அப் எண்ணில் தொடர்புகொண்டு கொரோனா பேரிடர் சம்பந்தமான தகவல்களை அளிக்கலாம் என்றும் கொரோனா சம்பந்தமாக உதவிகள் தேவை என்றால் இதில் கேட்டு பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த வாட்ஸ்அப் எண் தகவல் தொடர்பு மையத்திற்கு தகவல் அனுப்பும் என்றும் 24 மணி நேரமும் இயங்கும் அமைப்பு கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் அமைக்கப்பட்டது போல் இந்த வாட்ஸ்அப் எண் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த வாட்ஸ்அப் எண்ணை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு எடுத்துள்ள புதிய முயற்சி இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் இந்த வாட்ஸ் அப் எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளதுள்ளதை அடுத்து பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்


 

From around the web