இதுதான் என் அட்ரஸ், முடிஞ்சா ரெய்டுக்கு வா: சவால்விட்ட உதயநிதி

 

இன்று காலை முதல் திமுக பிரமுகர்கள் பலரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் எனது வீட்டிற்கு முடிந்தால் ரெய்டு செய்து பாருங்கள் என உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திமுக தலைவர் ஸ்டாலின் மகனும், உதயநிதியின் சகோதரியுமான செந்தாமரை வீட்டில் இன்று காலை திடீரென வருமான வரித்துறையினர்களின் ரெய்டு நடந்தது. 12 மணி நேரமாக அவரது வீட்டில் ரெய்டு நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 

senthamarai,

மேலும் திமுக வேட்பாளர்கள் மோகன், எ.வ.வேலு உள்பட பலரது வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது என்பதும் திமுக பிரமுகர்களின் ஒரு சிலரின் வீட்டிலும் ரெய்டு நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ’எனது சகோதரி வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியவர்கள் தைரியம் இருந்தால் என் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்படும் என்றும் இது தான் என் அட்ரஸ் முடிஞ்சா வந்து பாரு’ என்றும் உதயநிதி சவால் விடுத்தார். உதயநிதியின் சவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web