கண்டிப்பாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உண்டு: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

 
anbil

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா? நடக்காதா? என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் இருந்து வரும் நிலையில் கண்டிப்பாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சகம் அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தது. இதில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து செய்த ஆலோசனையில் அனைத்து மாநிலங்களும் பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. வேண்டுமானால் மொழித்தேர்வுகளை மட்டும் நீக்கிவிட்டு மற்ற தேர்வுகளை நடத்தலாம் என்றும் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பின்னர் தான் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக தெரிந்தது

இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை ஏற்கனவே 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் முடிவடைந்த நிலையில் எழுத்துத் தேர்வு மட்டுமே நடைபெற உள்ளது. இதனை அடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு உண்டு என்றும் ஆனால் அதே நேரத்தில் மாணவர்கள் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றும் கொரனோ பாதிப்பு குறைந்த பிறகு பொதுத்தேர்வை நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

12ஆம் வகுப்பு, பொதுத்தேர்வு, அன்பில் மகேஷ்,

From around the web