பாஜக கொடியை தூக்கிலிட முயன்ற பெண்ணால் பரபரப்பு

 

பாஜக தமிழக தலைவர் எல் முருகன் அவர்கள் பொறுப்பு ஏற்றவுடன் பல திரையுலக நட்சத்திரங்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் ரவுடிகள் உள்பட ஒரு சில சமூக விரோதிகளும் பாஜகவில் இவரது தலைமையில்தான் இணைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது 

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த ஒரு பெண் திடீரென எல் முருகனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜக கொடியை தூக்கிலிட முயன்றதாக வெளிவந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
பாஜக தமிழக தலைவர் எல் முருகன் வீடு அருகே நர்மதா என்ற பெண் இன்று காலை திடீரென போராட்டம் நடத்தினார். எல் முருகன் அவர்களை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தும் பாஜக கொடியை அவர் தூக்கிலிட முயன்றார்

மேலும் தமிழக பாஜக ரெளடிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும் அவர் கூறினார் பாஜக கொடியை தூக்கிலிட முயன்ற அந்த பெண்ணை பாஜக தொண்டர்கள் தடுத்து நிறுத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

From around the web