முக ஸ்டாலினிடம் உதவி கேட்ட பெண்ணுக்கு ரூ.2 லட்சம் வழங்கிய தமிழக அரசு

 

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களிடம் உதவி கேட்ட பெண்ணுக்கு மறுநாளே தமிழக அரசு ரூ.2 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திருவண்ணாமலை பகுதியில் உள்ள இளம்பெண் எழிலரசி எனப்வர் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த நிலையில் அவருடைய பக்கத்து வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் அவருடைய வீட்டின் சுவர் இடிந்து விழுந்து எழிலரசியின் தாயார் இறந்துவிட்டார் 

இது குறித்து முதலமைச்சர் இரங்கல் தெரிவித்ததோடு ரூபாய் இரண்டு லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் அந்த நிதி உதவி இன்னும் வழங்கப்படவில்லை என்று முக ஸ்டாலின் அவர்கள் திருவண்ணாமலை வந்தபோது மனு கொடுத்தார்

ezhilarasii

எழிலரசி கொடுத்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முக ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில் அடுத்த நாளே எழிலரசியின் வங்கி கணக்கில் ரூபாய் இரண்டு லட்சம் அரசு டெபாசிட் செய்துள்ளது 

இதுகுறித்து எழிலரசி கூறியபோது ஸ்டாலின் அய்யா அவர்களிடம் நான் மனு கொடுத்த மறுநாளே என்னுடைய வங்கி கணக்கில் ரூபாய் 2 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஸ்டாலின் அய்யா அவர்களுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது:

திருவண்ணாமலையில் தாயை இழந்த பெண் ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வில் மனு கொடுத்திருந்தார். உடனடியாக திமுக உதவும் என உறுதியளித்தேன். பதறிய அரசு 2 லட்ச ரூபாயை வழங்கியிருக்கிறது. திமுக-விடம் கேட்டால்தான் அரசின் காதுகளில் விழுகிறது! நாளை அமையும் திமுக அரசு கேட்காமலும் உதவும் என்று பதிவு செய்துள்ளார்


 

From around the web