நகை வாங்க சரியான நேரம்: குறைந்து வருகிறது தங்கத்தின் விலை!

 
gold

சர்வதேச சந்தையில் தங்கம் வெள்ளி விலை குறைந்து வருவதை அடுத்து இந்தியாவிலும் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருவது குறித்த செய்தியைப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் சென்னையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 

நேற்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.4430 என்ற நிலையில் இருந்த நிலையில் இன்று சென்னையில் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 4410 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதே போல் நேற்று சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 35440 என்ற விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இன்று சவரன் ஒன்றிற்கு ரூபாய் 35280 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூபாய் 4769 என்றும் 8 கிராம் ரூபாய் 38152 என்றும் விற்பனையாகி வருகிறது. அதே போல் சென்னையில் வெள்ளியின் விலை இன்று ஒரு கிராம் 72.90 என்றும் ஒரு கிலோ 72,900 என்றும் விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.73.10 என்றும் ஒரு கிலோ ரூ.73,500 என்றும் விற்பனையாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web