தமிழகத்தில் அடுத்த ஆட்சி பாஜக ஆட்சிதான்: அண்ணாமலை தகவல் 

 

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பதும் அவர் பாஜகவில் இணைந்த ஒரு சில நாட்களில் அவருக்கு பாஜகவின் மாநில துணை தலைவர் பதவி தரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் அண்ணாமலை அவர்களுக்கு ராஜ்யசபா எம்பி பதவியும் அதனை அடுத்து மத்திய அமைச்சர் பதவியும் தரப் போவதாகவும் பாஜக வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 

இந்த நிலையில் தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வரும் அண்ணாமலை சமீபத்தில் அளித்த பேட்டியின் போது அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் அமரும் என்று தெரிவித்துள்ளார் 

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவை மக்கள் பார்க்கின்றனர் என்றும் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக வலுவாக காலூன்றி நிற்க கூடிய ஒரு கட்சியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

மேலும் 2026 ஆண்டு தேர்தலில் பாஜக கண்டிப்பாக ஆட்சியை பிடிக்கும் என்று அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web