ஸ்டாலின் பேசியதை கட் செய்துவிட்டு, ரஜினி செய்தியை ஒளிபரப்பிய முன்னணி ஊடகம்!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னை திரும்பினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

அப்பல்லோ மருத்துவமனையிலும், சென்னையிலும் ரஜினியை வரவேற்க ஏராளமான ரசிகர்கள் காத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஜினியின் டிஸ்சார்ஜ் குறித்த செய்தியும் அவர் ஐதராபாத்தில் இருந்து சென்னை வரும் வரையிலுமான செய்தியும், சென்னை விமான நிலையத்திலிருந்து போயஸ் கார்டன் செல்லும் வரை உள்ள செய்தியையும் பிரேக்கிங் செய்திகளாக முக்கிய ஊடகங்கள் அனைத்தும் ஒளிபரப்பு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது

stalin

இந்த நிலையில் தமிழின் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் பேச்சை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ரஜினியின் டிஸ்சார்ஜ் குறித்த செய்தி வந்தவுடன் முக ஸ்டாலின் செய்தியை பாதியிலேயே கட் செய்துவிட்டு பிரேக்கிங் செய்திகளாக ரஜினி பற்றிய செய்தியை ஒளிபரப்பியது. இது திமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை தற்போது ரஜினியின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.


 

From around the web