முதலமைச்சர் யார் என்ற விவகாரம்: ஓபிஎஸ் திடீர் ஆலோசனை!

 

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களாக கோஷமிட்டு கொண்டிருந்த நிலையில் நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்திலும் இந்த விவகாரம் பரபரப்பாக இருந்தது

ஜெயலலிதாதான் தன்னை முதல்வர் ஆக்கினார் ஆனால் உங்களை முதல்வர் ஆக்கியது சசிகலா என்றும் ஓபிஎஸ் அவர்களும், அதற்கு பதிலடியாக உங்களையும் என்னையும் முதல்வர் ஆக்கியது சசிகலாதான் என்று ஈபிஎஸ்பி அவர்களும் கூறியதால் செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அக்டோபர் இரண்டாம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்பதோடு அந்த செயற்குழு கூட்டம் முடிந்தது

இந்த நிலையில் இன்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது உள்ளத்தில் திடீரென ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர் 

இதனால் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் இன்று பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி துணை முதல்வர் சென்னையில் இருந்து திடீரென தனது சொந்த ஊரான தேனிக்கு செல்ல இருப்பதாகவும் மாலையிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் முதல்வருடன் அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web