ஆப்கன் மக்களை மீட்க சென்ற விமானம் கடத்தல்: அதிர்ச்சியில் உலக நாடுகள்!

 
flight

ஆப்கானிஸ்தான் நாடு சமீபத்தில் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் அந்நாட்டில் இருந்து பலர் வெளியேறி வருகின்றனர் என்பதும் உலகின் பல நாடுகளில் இருந்து விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு பொதுமக்களை வெளியேற்ற உதவி செய்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களை மீட்க சென்ற விமானம் ஒன்று திடீரென கடத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உக்ரைன் அரசு தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டில் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சிக்கித்தவிக்கும் தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காக விமானம் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அந்த விமானத்தில் இருந்த சிலர் திடீரென ஆயுதமேந்தி அந்த விமானத்தை ஈரானுக்கு கடத்திச் சென்றதாகவும் உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 

கடத்தப்பட்ட விமானத்தை மீட்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் அரசின் இந்த குற்றச்சாட்டு உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

இந்தியா உள்பட பல நாடுகளிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு தங்களுடைய நாட்டு மக்களை மீட்க விமானங்கள் அனுப்பப் பட்டு கொண்டிருக்கும் நிலையில் திடீரென உக்ரைன் நாட்டு விமானம் கடத்தப்பட்டு இருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது 

ஆனால் அதே நேரத்தில் உக்ரைன் நாட்டின் இந்த குற்றச்சாட்டை ஈரான் நாடு மறுத்துள்ளது. உக்ரைன் நாட்டில் விமானம் ஒன்று எரிபொருள் நிரப்புவதற்காக ஈரானில் தரை இறங்கியது என்றும், ஆனால் எரிபொருளை நிரப்பி விட்டு அந்த விமானம் சென்றுவிட்டதாகவும் ஈரான் நாட்டின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

From around the web