பள்ளிகளுக்கு அறிவிப்பு: உயர்நீதிமன்ற உத்தரவு கூறுவது என்ன?

 
school

20212022 கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள கட்டண பாக்கியை செலுத்தும்படி பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது என்றும் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்ற வழக்கில் தமிழக அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தற்போது பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடத்தப்பட்டு இருக்கும் நிலையில் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள அனுமதி இல்லை என ஒரு சில தனியார் பள்ளிகளில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது

எனவே இந்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை உடனடியாக கட்ட வேண்டும் என்று பெற்றோர் பெற்றோர்களை வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தான் தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web