பிரச்சாரம் சென்றபோது குஷ்புவிடம் சிறுமி வைத்த கோரிக்கை!

 
பிரச்சாரம் சென்றபோது குஷ்புவிடம் சிறுமி வைத்த கோரிக்கை!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகை குஷ்பு கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலன் பிரசாரத்தை விட குஷ்புவின் பிரச்சாரம் அதிகமாக பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

ஆயிரம் விளக்கு தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் தொகுதி என்றாலும் குஷ்புவுக்கு இஸ்லாமியர்களும் ஆதரவு கொடுத்து வருவதாக கூறப்படுவதால் அந்த தொகுதியில் அவர் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் வீடு வீடாக பேர் தேர்தல் பிரச்சாரம் செய்யும் குஷ்பு ஒவ்வொரு வீட்டிலும் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பதை காது கொடுத்து கேட்டு தான் எம்எல்ஏ ஆனதும் அந்த பிரச்சனையை சரி செய்ய முயற்சிக்கிறேன் என்று உறுதிமொழி கொடுத்து வருகிறார் 

kushboo

அந்த வகையில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றபோது ரீனா என்ற கண்பார்வை  சரியாக இல்லாத சிறுமி, தன்னிடம் ஒரு கோரிக்கை வைத்ததாக குஷ்பு தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். தனக்கு கண் பார்வை சரியாக தெரியாது என்பதால் தன்னுடைய வீடு இருக்கும் தெருவுக்கு நல்ல சாலை போட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டதாகவும் கண்டிப்பாக அதை நான் செய்து தருகிறேன் என்று அந்த சிறுமிக்கு தான் வாக்குறுதி கொடுத்ததாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன


 

From around the web