முக ஸ்டாலிலின் கூறிய அடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முதல்வர் முடிவு?

 

கடந்த சில நாட்களாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தல் பிரசாரங்களில் அளித்துவரும் வாக்குறுதிகளை அடுத்த சில நாட்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

விவசாய கடன்கள் ரத்து, லாக்டவுன் நேரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து உள்பட பல வாக்குறுதிகளை திமுக தலைவர் முக ஸ்டாலின் வரிசையாக ஒருபக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த வாக்குறுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்னொரு பக்கம் நிறைவேற்றிக் கொண்டு இருப்பதை பார்த்து வருகிறோம் 

stalin

இந்த நிலையில் சமீபத்தில் முக ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்யப்படும் என்பதுதான். அதேபோல் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தார்

இந்த நிலையில் தமிழக அரசு மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன்களை ரத்து செய்வதற்காக ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் மாவட்ட வாரியாக மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன்கள் தொகை எவ்வளவு என்று கணக்கு எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது

மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன்கள் அனைத்தும் ரத்து என்ற அறிவிப்பு இடைக்கால பட்ஜெட்டில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முக ஸ்டாலின் அளித்த அடுத்த வாக்குறுதியும் நிறைவேறும் அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

From around the web