நான் என்ன கூறுகிறேனோ, அதையே முதலமைச்சர் செய்து வருகிறார்: முக ஸ்டாலின்

 

நான் என்ன சொல்கிறதோ அதையே முதலமைச்சர் செய்து வருகிறார் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசியுள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். அவர் ஒவ்வொரு பிரச்சாரத்திலும் பொது மக்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி கடன் ரத்து, விவசாயிகளின் கூட்டுறவு கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அவர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் கூறி வருகிறார்.

eps mks

இந்த நிலையில் திமுக தலைவர் கொடுக்கும் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக தமிழக முதல்வரால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து கூறிய திமுக தலைவர் முக ஸ்டாலின் நான் என்ன கூறுகின்றனோ அதையே முதலமைச்சர் செய்து வருகிறார். 7 பேர் விடுதலை விவகாரத்தில் நாங்கள் சந்தித்த பின் தான் அவர் கவர்னரை சந்தித்தார். பொய் நாடகங்களை நாள் தோறும் நடத்தி வருகிறார் முதலமைச்சர் என்று கூறினார்

மேலும் நீதிமன்றம் கூறிய போது, கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என்றும், திமுக கூறிய பின்பு, தற்போது பயிர் கடன்களை தள்ளுபடி செய்துள்ளார் முதல்வர் என்றும் முக ஸ்டாலின் கூறினார்.

From around the web